Home பிரதான செய்திகள்பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு நான்கு மாதங்கள் தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு நான்கு மாதங்கள் தடை

by admin

உள்ளூர் தொடரில் விளையாடும்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியமைக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹமட் ஷேசாத்துக்கு நான்கு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அஹமட்; உள்ளூர் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் கோப்பை தொடரில் விளையாடும்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பல்வேறு சுழற்சி முறையில் செய்யப்பட்ட சோதனையில் உறுதி nஅய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை அஹமட் மறுத்த போதிலும் அவரை கடந்த ஜூலை 10ம் திகதியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிறுத்தி வைத்திருந்தது.இதனால் எதிர்வரும் வரும் நவம்பர் 10ம்திகதி வரை அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என்பதுடன் அவருக்கு ஊக்கமருந்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு பாடங்கள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More