உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகளை எடுத்துச் சென்ற தம்பதி கைது

 

குழந்தைகளை அழைத்துச் செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்துச் சென்ற ஒரு தம்பதியை மெக்சிகோ காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட போது இந்த வாகனத்தில் 2 வயதுக்கு குழந்தை உட்பட்டவர்களின் உடற்பாகங்கள் பையொன்றில் வைக்கப்பட்ட நிலையில் வாகனத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது இவர்கள் பத்து பேரை கொன்றிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேஸி மேரி பெக்கரா  (Mercy Mary Becerra) என்னும் 43 வயதான பெண்ணும் 39 வயதான ஜோன் லூயிஸ் ஹாற்லி (John Lewis Hartley) என்னும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட அந்த ஆண் மெக்சிகோ புறநகர் பகுதியில் தான் இருபது பேரை கொன்றதாக ஒப்புக்கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தம்பதி உடல் உறுப்புகளை விற்பனை செய்துள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர் அவற்றினை யாருக்கு விற்பனை செய்கின்றார்கள் என்னும் தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.