பிரதான செய்திகள் விளையாட்டு

ஷங்காய் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

SHANGHAI, CHINA – OCTOBER 09: Novak Djokovic of Serbia hits a return against Jeremy Chardy of France during 2nd Round in 2018 Rolex Shanghai Masters on Day 3 at Qi Zhong Tennis Centre at Qi Zhong Tennis Centre on October 9, 2018 in Shanghai, China. (Photo by Fred Lee/Getty Images)

சீனாவில் நடைபெற்றுவரும் ஷங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்  மூன்றாவது   சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  நேற்றையதினம் நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டி ஒன்றில் செர்பியா வீரர் ஜோகோவிச் பிரான்சைச் சேர்ந்த ஜெர்மி சார்டியுடன் போட்டிஎயிட்டார். 1 மணி 23 நிமிடம் நடந்த இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வென்று ஜெர்மி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில்; குரோசியாவின் மரின் சிலிச் சிலி நாட்டின் நிகோலஸ் ஜார்ரியிடம் 6-2, 6-7 (6-8), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியுள்ளார். ஏனைய போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் மமத்யூ அப்டென் குரோசியாவின் போர்னா கோரிச் , ஜேர்மனியின் பீற்றர் ஜோகோவிஸ்க் ஆகியோரும் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.