Home உலகம் உய்கர் முஸ்லிம்களை சிறைவைத்து கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது.

உய்கர் முஸ்லிம்களை சிறைவைத்து கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது.

by admin

சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் மதத் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என அதிகாரிகளால் குற்றம் சுமத்தப்பட்ட உய்கர் முஸ்லிம்களை போதனை முகாம்களில் சிறைவைத்து அவர்களுக்கு கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது.

சின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போவது தொடர்பாக உலக அளவில் கவலைகள் எழுந்துள்ள நிலையில் சுமார் 10 லட்சம் உய்கர் முஸ்லிம்களை சீனா சிறையில் அடைத்திருக்கலாம் என்ற முறைப்பாடு ஐநா மனித உரிமைகள் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தநிலையில் உய்கர் முஸ்லிம்களை போதனை முகாம்களில் சிறைவைத்து அவர்களுக்கு கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியமையானது இது தொடர்பில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் முதல் விளக்கமாக  கருதப்படுகின்றது. தொழிற்பயிற்சி அளிப்பதும், நடத்தையை திருத்துவதும், கருத்தியல் கல்வி வழங்குவதும் இதன் நோக்கமாக இருக்கும் என இந்த முகாம்களை சட்டபூர்வமாக்கியுள்ள சின்ஜியாங் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சின்ஜியாங்கில் நிலவும் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு எதிரான பெரியதொரு நடவடிக்கையை சீனா ஆரம்பித்துள்ளது எனவும் உணவு பொருட்கள் அல்லாத ஹலால் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு சீனா முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் துணிகளை அணிவது தடை செய்யப்படுவதற்கான புதிய விதிமுறைகளும் பின்பற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More