Home பிரதான செய்திகள்இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று

by admin


இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது. முதலாவது போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது போட்டி இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் இலங்கையுடனான போட்டியின் போது இங்கிலாந்து அணியினர் தங்களால் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும் என இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.கடந்த சில வருடங்களாக தாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டுவந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் சுழற்பந்து வீச்சாளாகளை சிறப்பாக எதிர்கொள்வதற்கு இங்கிலாந்து மைதானங்களிற்கும் இலங்கை மைதானங்களிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரசீத்கானிடம் சில விசேட திறமைகள் உள்ளன எனவும் அதனை இலங்கை மைதானங்களில் காணமுடியும் எனவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More