இலங்கை பிரதான செய்திகள்

தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சிறுவர் தினத்தையொட்டி மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை(13) மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதன் போது சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும் இடம் பெற்றது.

மேலும் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link