ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடந்த இரண்டாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என்று தொடரை வென்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, தனது முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களை எடுத்த நிலையில் இந்திய அணி 367 ஓட்டங்களை எடுத்திருந்தது.
தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 127 ஓட்டங்களை மட்டுமே எடுத்த்திருந்த நிலையில் , இந்தியாவுக்கு 72 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்னும் நிலை காணப்பட்டது. இந்தநிலையில் இந்திய தொடக்க வீரர்கள் கே. எல். ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் தலா 33 ஓட்டங்கள் பெற்ற நிலையில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை இந்தியா எட்டியது.
போட்டியின் போது 10 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்