Home உலகம் அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை வேண்டும் – சிரியா

அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை வேண்டும் – சிரியா

by admin


அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிரியா வலியுறுத்தி உள்ளது. சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டு போர் 7 ஆண்டுகளாக நீடித்து வருவதுடன் மறுபுறம் ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன

இந்தநிலையில் அமெரிக்க கூட்டுப்படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கூட்டுப்படைகளின் தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிக அளவில் கொல்லப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சுமத்திவருகின்ற சிரியா அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் முற்றிலுமாக வெளியேற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

மேலும் டீர்-அல்-சவுர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாஜின் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க கூட்டுப்படைகள் இரசாயன தாக்குதலை நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள சிரிய அரசு, தொடர்ந்து இதுபோன்று குற்றங்களில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும் சட்டத்துக்கு புறம்பாகவும், ஆக்கிரமிப்பு முறையிலும் சிரியாவில் அமெரிக்க படைகள் முகாமிட்டு இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More