184
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2′ திரைப்படத்தில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி, பயங்கரமான தோற்றத்தில் நடிக்க ராஜ்கிரண் தான் காரணம் என்று கூறியுள்ளார். சண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார். இதுகுறித்து கேட்டபோது ‘இரண்டு படங்களில் நாங்கள் இணைந்து நடித்தாலும் இரண்டிலுமே எங்களுக்கு இணைந்து தோன்றும் காட்சிகள் இல்லை. கீர்த்தி சுரேஷ் மிக சிறந்த நடிகை இன்னும் பல உயரங்களை தொடுவார் என்று கூறினார் வரலட்சுமி.
அத்துடன் சண்டக்கோழி 2 படத்தில் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னை பார்த்து உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஆனது. எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் என்றும் வரலட்சுமி கூறினார்.
Spread the love