Home இலங்கைமடு ‘தேக்கம்’ கிராமத்து மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி…

மடு ‘தேக்கம்’ கிராமத்து மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ‘தேக்கம்’ கிராம மாணவர்கள் தமக்கு உரிய முறையில் பேருந்து சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதனால் தாம் தாமதித்தே பாடசாலைக்கு செல்வதாகவும் கூறி கடந்த சில தினங்களுக்கு முன் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மாதா கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பேருந்தை இடை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த மாணவர்களின் போராட்டத்திற்கு பலனாக இன்று (19.10.18) வெள்ளிக்கிழமை முதல் மாணவர்களின் நலன் கருதி இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் பேருந்து ஒன்று சேவையில் ஈடு படுத்தப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.சீலனின் முயற்சியினாலும், மடு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் முயற்சியினாலும் இந்த பேரூந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More