Home இந்தியாஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்!

உத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்!

by admin

 

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் சுமார் 850 ம்பேரின் வங்கிக் கடன்களை அடைக்க ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். இது தொடர்பான அறிவித்தலை சமூக வலைத்தளம் ஊடாக அமிதாப் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்றவை காரணமாக பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போயுள்ளது. இதனால் விவசாயத்திற்காக பெறப்பட்ட வங்கிக்கடன் பெறும் பாரத்தை விவசாயிகள் தலையில் சுமத்தியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்ளும் துயர நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

சில மாநில அரசுகள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தபோதும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

இதற்கு முன்னர் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், ‘என்னால் இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும்’ என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More