Home சினிமாசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு!

சர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு!

by admin
விஜய் நடிக்கும் சர்கார் படத்தில், அவர் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வேடத்தில் நடிப்பதாக திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம் அரசியல் படமாக உருவாகி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் இதில் முதல் அமைச்சராக நடிப்பதாக செய்தி வெளியானது. எனினும் அவ்வாறு நடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியில“ இப் படத்தில் விஜய் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் கூறியுள்ளார். தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கூகுளின் தலைமை பொறுப்புக்கு வந்த சுந்தர் பிச்சையின் வேடத்திலேயே விஜய் சர்கார் படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தை சுரண்டுவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் விஜய், பின்னர் தமிழ்நாட்டை அரசியல்வாதிகளிடம் இருந்து காக்க எப்படி போராடுகிறார் என்பதே கதை என்று கூறி உள்ளார்.    படத்தின் முன்னோட்டம் (டீசர்) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More