Home பிரதான செய்திகள்நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

by admin


நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் நியூசிலாந்தின் மௌன்ட் மகட்டரேயில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற வகையில் வென்றுள்ள நிலையில் நாளை ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உபாதை காரணமாக ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடாதமை பாதிப்பாகவே கருதப்படுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மூன்றாமிடத்தில் நியூசிலாந்து காணப்படுவதோடு, எட்டாமிடத்தில் இலங்கை காணப்படுகின்றன.
இந்தநிலையில், இத்தொடரின் எந்த முடிவும் இலங்கையின் நிலையில் தாக்கம் செலுத்தாது எனற் போதிலும் 3-0 என இத்தொடரை வெள்ளையடித்தால் மாத்திரமே நியூசிலாந்து மூன்றாமிடத்தில் தொடருமென்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More