Home சினிமா96 படத்தை சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா

96 படத்தை சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா

by admin


அண்மையில் வெளியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள 96 திரைப்படத்தின் தெலுங்கு மறு உருவாக்கத்தில் சமந்தா நடிப்பதற்கு தமிழில் அப் படத்தில் நடித்த திரிஷா ஒப்புக்கொண்டுள்ளார்.

2018ஆம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய காதல் படமான ‘96’ திரைப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். இத் திரைப் படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் முதலியோர் நடித்துள்ளனர். இப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். படம் பார்த்தவர்கள் பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் இத் திரைப்படம் நினைவூட்டியது.

இந்த நிலையில் இத் திரைப்படத்தின் மறுஉருவாக்க உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கு திரையுரலகில் கடும் போட்டிக்கு இடையே தயாரிப்பாளர் தில் ராஜு இப் படத்தின் மறு உருவாக்க உரிமையைக் பெற்றார். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க உள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கதாபாத்திரங்களில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக நாயகனாக நடிக்க சர்வானந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திரிஷா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் போட்டி நிலவியது. திரிஷா அந்த வாய்ப்பை விட்டு கொடுக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. ‘96’ வெளியான போது, திரிஷாவின் நடிப்பை சமந்தா பாராட்டினார். அதனைத் தொடர்ந்து ‘96’ படத்தை மறு உருவாக்கம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது அவரே நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More