198
முத்துகுமரன் இயக்கும் தர்மபிரபு திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் நடிப்பதன் மூலம், நடிகை மேக்னா 7 வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரைப்பட உலகில் மீண்டும் நுழைகின்றார்.
யோகி பாபு, திலீபன் ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் நடிக்கும் நடிகை மேக்னா நாயுடு, சிம்பு நடித்த சரவணா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.
அத்துடன் ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தையம் உள்ளிட்ட படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். சிறுத்தை, குட்டி படங்களில் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.
இந்தப் படத்தில் யோகி பாபு இயமனாகவும், ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளுகின்றார்.
Spread the love