சினிமா பிரதான செய்திகள்

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம் மாதம் ஆரம்பம்!


இயக்குனர் சங்கர் இயக்க, கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த, ‌ ‘இந்தியன்’ திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. இத் திரைப்படத்தில் நடிகர் கமல் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஊழல், லஞ்சத்திற்கு எதிரானதாக இத் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

22 ஆண்டுகளின் பின்னர், ‘இந்தியன் 2’ படத்துக்காக கமல் – ‌சங்கர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் கமலின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார். திரைக்கதை, வசனப் பணிகள் நிறைவுற்றதனால் படப்பிடிப்பு  களங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமையால், இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக கருத்துக்கள் உலாவியுள்ளன. இதனை மறுத்துள்ள படக்குழுவினர், இந்தியன்-2 படப்பிடிப்பு எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இத் திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திரைப்படத்திலும் கமல்ஹாசன் வயதானவராகவும், இளைஞராகவும் 2 வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link