Home இலங்கைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் சம்பிக்க சென்றுள்ளார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் சம்பிக்க சென்றுள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று (03-01-2019) காலை சென்றுள்ளார். அத்துடன் கண்டாவளை மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச மக்களுடன் கலந்துரையாடியா அமைச்சர் மக்களிடம் கண்டாவளை மகா வித்தியாலயத்துக்கு நூலகத்திடற்கான கட்டிடத்தையும் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More