தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, அவர்கள் விரும்பும் அரசியலமைப்பு சீர்திருத்தம் எதனையும் கொண்டு வர முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சுமந்திரன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது எனவும் அதற்கென சில படிமுறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தாலும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது இலகுவானதல்ல எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.