Home இலங்கைமைத்திரிக்கு மனநிலை பாதிப்பு என்ற மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைபுகு மனு தாக்கல்!

மைத்திரிக்கு மனநிலை பாதிப்பு என்ற மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைபுகு மனு தாக்கல்!

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநிலை பாதிப்பு எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யாமலே ஆரம்ப நிலையில் தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு ஒன்று இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்துள்ளனர்.

சிவில் செயற்பாட்டாளர் தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் அதில் கோரியுள்ளார்.

அத்துடன் இம் மனுவில் காவல்துறை மா அதிபருடன் கோட்டை தலைமையகப் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதிக்கு மனநிலைப் பாதிப்பு என்று கூறிய மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டமை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More