143
நியூசிலாந்துக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 45 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
நியூசிலாந்து அணி துடுப்பாடிய போது இலங்கை பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பதனால் அவர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தலா 10 சதவிகிதமும், அணியின் தலைவர் மலிங்காவிற்கு 20 சதவிகிதமும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது
Spread the love