Home பிரதான செய்திகள்17வது ஆசிய கிண்ண கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ண கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்

by admin

17-வது ஆசிய கிண்ண கால்பந்து போட்டி இன்று ஆரம்பமாகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டி இன்று முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, 4 முறை கிண்ணத்தினை கைப்பற்றிய ஜப்பான் உள்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த முறை 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் க முதல்முறையாக இந்தமுறை அணிகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

6 பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிடும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பெறும் அணிகளில் 4 சிறந்த அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

அபுதாபியில் இன்று இரவு ஆரம்பமாகும் லீக் போட்டியில் போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைனை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More