Home இலங்கைகாத்தான்குடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by admin


மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறைப் பிரிவிலுள்ள கிரான்குளப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொங்கிறீட் கட்டையுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதியைச் சேர்ந்த கும்பஸ்தவரான இராசதுரை ஜீவநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  மேலும் காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடல் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர் அண்மையில் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More