182
வவுனியா – இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் நேற்றிரவு கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கி வைத்திருப்பதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புளியங்குளம் காவல்துறையினர் குறித்த சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்..
Spread the love