Home இந்தியாஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில்

by admin


உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. 63 ஏக்கர் பரப்பில் சுமார் 700 கோடியில் குஜராத்தில் மொட்டேராவில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இருந்த சர்தார் பட்டேல் மைதானம் 1982-ல் கட்டப்பட்டு பழமையானதால் புதிய மைதானம் கட்ட குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்ததன்படி பழைய மைதானம் முற்றிலும் இடிக்கப்பட்டு 2015-ல் கட்டுமான பணிகள் ஆரம்பமாகியது.

தற்போது கட்டப்படும் புதிய மைதானம் 1.1 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி உடையதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு 1 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட மெல்பேர்ர்ன் மைதானம்தான் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More