Home பிரதான செய்திகள்துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் திஸர பெரேரா முன்னேற்றம்

துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் திஸர பெரேரா முன்னேற்றம்

by admin


சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசை நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 22 இடங்கள் முன்னேறி திஸர பெரேரா 65ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சதம், அரைச்சதம் பெற்றதைத் தொடர்ந்தே திஸர பெரேரா இவ்வாறு முன்னேற்றமடைந்துள்ளார். மேலும் இத்தொடரில் இலங்கை சார்பாக ஓட்டங்களைப் பெற்ற நிரோஷன் டிக்வெல்ல, குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக ஆகியோரும் முன்னேறியுள்ளனர்.

டிக்வெல்ல, ஓரிடம் முன்னேறி 26ஆம் இடத்தை அடைந்துள்ளதோடு, குசல் பெரேரா ஏழிடங்கள் முன்னேறி 66ஆம் இடத்தை அடைந்துள்ளதுடன் தனுஷ்க குணதிலக 11 இடங்கள் முன்னேறி 82ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலிடத்திலும் ரோகித் ஷர்மா இரண்டாம் இடத்திலும் றொஸ் டெய்லர் மூன்னாறம் இடத்திலும் ஜோ ரூட் 4ம் இடத்திலும் பாபர் அஸாம் 5ம் இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்துக்கெதிரான தொடரில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்க, மூன்று இடங்கள் முன்னேறி 46ஆம் இடத்தை அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More