152
இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் எதிர்வரும் 14-ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தத் தொடருக்கான டிரா நேற்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது
இதில் 7-வது முறையாக கிண்ணத்தினை வெல்லும் முனைப்புடன் உள்ள முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், முதல் சுற்றின் போது தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரருடன் போட்டியிடுவார் ; என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் இஸ்தோமினை சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love