Home சினிமாகல்லூரி மாணவிகள் 9பேரை பாடகிகளாக்கும் இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9பேரை பாடகிகளாக்கும் இளையராஜா!

by admin

தான் இயக்கும் திரைப்படம் ஒன்றில் கல்லூரிகளில் கல்வி கற்கும் ஒன்பது மாணவிகளை இசைஞானி இளையராஜா பாடகிகளாக அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.  அண்மையில் இளையராஜா மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு தனது பிறந்த தினத்தையும் மாணவிகளுடன் கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் அவர் மாணவிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள்  கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இதன்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவென்றும்   தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அந்த இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள,  பாடகிகளாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை நடத்தி, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை இளையராஜா தெரிவு செய்துள்ளார். இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகவுள்ளனர்.

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More