Home பிரதான செய்திகள்அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி இன்று ஆரம்பம்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி இன்று ஆரம்பம்

by admin


அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான இந்தப் போட்டி வரும் 27-ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இதில் பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகிய 4 முன்னிலை வீரர்களும் கிண்ணத்தினைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.  கடந்த வருடம் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் கிண்ணத்தினையும் , நடால் பிரெஞ்சு ஓபன் கிண்ணத்தினையும் ;  ரோஜர் பெடரர் அவுஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தினையும் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேவேளை குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளாத அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும் மகளிர் பிரிவில் பங்கேற்கவுள்ளார்.

இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் கிண்ணங்களைக் கைப்பற்றியுள்ள செரீனா இன்னும் ஒரு கிண்ணத்தினை வென்றால் அதிக கிராண்ட் ஸ்லாம் கிண்ணத்தினை வென்ற வீராங்கனை என்ற சாதனையை அமெரிக்காவின் மார்கரெட் கோர்ட்டுடன் பகிர்ந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More