கமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதன் காரணமாக அரசபடைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றையதினம் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை தடுத்து நிறுத்திய ஆயுதம் தாங்கிய குழுவொன்று பயணிகள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமரூனினில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டனர்..
159
Spread the love