196
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. அதன் போது, வினோத சமையலற , புஷ்பக விமானம் , இராணுவ பீரங்கி , எறும்பு , ஊஞ்சல் , கல் உடைக்கும் இயந்திரம் , பறக்கும் கமரா (ட்ரோன்), படகும் மீனவர்களும் , நவீன செய்மதி என வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட 84 பட்டங்கள் ஏற்றப்பட்டன.
அதில் முதலாமிடத்தை ம. பிரசாந்த் வடிவமைத்த சமையலறை பட்டமும் , இரண்டாமிடத்தை த. தயாளன் வடிவமைத்த ராதையும், புஷ்பக விமானமும் பட்டமும் , மூன்றாமிடத்தை ஸ்ரீ. நிரோசன் வடிவமைத்த விண் பீரங்கி பட்டமும் பெற்றுக்கொண்டன.
Spread the love