237
வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஆயிரத்து 201 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love