எந்த இடத்தில் களம் இறக்க அணி விரும்பினாலும், மகிழ்ச்சியாக களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளதாக எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3-வதும் இறுதியுமான போட்டியில் இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலியுடன் இணைந்து 54 ஓட்டங்கள் சேர்த்த டோனி, கேதர் ஜாதவ் உடன் இணைந்து 121 ஓட்டங்களைப் பெற்றதுடன் மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்து p ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றிருந்தார்.
4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி துடுப்பெடுத்தாடினாலும் மகிழ்ச்சியே எனத் தெரிவித்த அவர் ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
14 வருடத்திற்குப் பின்னர் தான் 4-வது இடத்தில் அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.