Home சினிமா விஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :

விஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :

by admin



நடிகர் விஜயின் 63 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லியின் இயக்கத்தில், இத் திரைப்படத்தில் விஜயிற்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் கதை, விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தியதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தினம் படப்பிடிப்பு இடம்பெறவுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் திரைபத்தின் நாயகன் கதிர், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். அத்துடன், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை கனிக்கிறார். இத் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More