பேட்ட திரைப்படத்தின் பின்னர் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர், காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜனி நடித்த பேட்ட திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகியுள்ள நிலையில், அடுத்த திரைப்படத்தில் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் பெப்ரவரி மாத்தில்ம ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரயாக நடிக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ரஜனிகாந்த் இப் படத்தில் காக்கி உடை அணிந்து நடிக்கவுள்ளமை விசேட அமம்சமாகும். மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தையும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இதுதவிர சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமாரிடமும் ரஜினி கதை கேட்டுள்ளாராம். பேட்ட படத்திற்கு பின்னர், கார்த்திக் சுப்புராஜிடம் இன்னொரு கதையொன்றையும் தயார் செய்யுமாறும் ரஜினி கூறியுள்ளாராம். மேலும் ரஜினி – ராஜமவுலி கூட்டணிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.