ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோப்வே மீட்பு ஒத்திகையின் போது மீட்பு ரொலி விபத்துக்குள்ளானதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், ஜம்மு பகுதியில் பாஹூ கோட்டை- மகாமாயா பூங்கா மற்றும் மகாமாயா-பீர் ஆகிய வழித்தடங்களில் இரண்டு கட்டங்களாக ரோப் கார் சேவை வழங்கப்பட உள்ள நிலையில் இதற்கான பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சோதனை ஓட்டம் மற்றும் மீட்பு ஒத்திகையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீட்பு ரொலி விபத்துக்குள்ளானதில் ரோப் கார்களின் கேபிள் அறுந்து உடைந்தனால் மீட்பு ரொலி தரையில் விழுந்ததில் அதிலிருந்த தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில், ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி…
128
Spread the love