சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகனும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் அமைப்பினரை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்திருந்த நிலையில், டிரம்பும், துருக்கி எர்டோகனும் தொலைபேசி பேசி வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளனர் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது