கிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி சென்ற போது அவரின் பிரசன்னத்திற்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட குறித்த இடத்திற்கு சென்ற கிளி நொச்சி காணாமல் ஆகப்பட்டவர்களின் உறவினர்களை காவற்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இன்றைய தினம் மரகை நடுகை நிகழ்வு ஒன்றுக்காக கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைகழக வளாகத்திற்கு ஜனாதிபதி சென்றிருந்த போது கிளிநொச்சியில் 701 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சிலர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு பல்கலைகழக வளாகத்திற்கு சென்றிருந்தனர்.
இதன் போது அவர்களை பல்கலைகழக வளாக சூழலின் அருகில் செல்ல விடாது பாதுகாப்பு கடமையில் இருந்த காவற்துறையினர் ஏ9 பிரதான வீதியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் ஏ9 பிரதான வீதியில் இருந்து ஜனாதிபதியின் பிரசன்னத்திற்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் காணாமல் ஆகப்பட்ட உறவுகளுக்கு நூறு நாட்களுக்குள் தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய ஜனாதிபதி அதனை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தனர்.