Home இலங்கைகொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..

கொள்ளுப்பிட்டி சொகுசு குடியிருப்பில் 90 கிலோ ஹெரோயின்…..

by admin

காவற்துறை  விசேட அதிரடிப் படையினர், காவற்துறை  போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள சொகுசு குடியிருப்புத் தொகுதி ஒன்றிலுள்ள வீட்டிலிருந்து சுமார் 90 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1080 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, காவற்துறைஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்போது 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 மற்றும் 43 வயதான அமெரிக்கப் பிரஜைகள் இருவரும் அடங்குகின்றனர். அதேநேரம், 45 வயதான ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவரும் குறித்த வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் இலங்கையர்கள் என்பதுடன், அவர்கள் இருவரும் ஹிக்கடுவைப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More