Home இலங்கைநீதிமன்றில் முன்னிலையாகுமாறு சரத் என். சில்வாவாவுக்கு உத்தரவு…

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சரத் என். சில்வாவாவுக்கு உத்தரவு…

by admin

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவை எதிர்வரும் 07ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக சிரேஸ்ட பேராசிரியரகளான சந்திரகுப்த தேனுவர, ஹேவா வாடுகே சிரில் மற்றும் பிரியந்த குணவர்தன ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை பெறுவதாக தெரிவித்த நீதிமன்றம் அதன்படி வழக்கை எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 03ம் திகதி மருதானையில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றிலும் மற்றொரு நிகழ்வொன்றிலும சரத் என். சில்வா நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More