குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய ரீதியில் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ‘பிள்ளைகளிடம் இருந்து கற்று கொள்ளுங்கள்’ எனும் தொனிப்பொருளில் மன்- புனித சவேரியார் பெண்கள் பாடசாலையில் விழிப்புணர்வு கருத்தமர்வு பாடசாலை அதிபர் கில்டா சிங்கராஜா தலைமையில் இன்று புதன் கிழமை காலை பொது ஒன்று கூடலின் போது இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் பாடசாலை ரீதியில் மாணவர்கள் எவ்வாறு போதை பொருட்கள் பாவனையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் போதை பொருள் பாவனை தொடர்பான குற்ற செயல் ஒன்றினால் பாதிக்கப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த கலந்துரையாடல்களை மன்னார் நகர் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி மற்றும் ஊடகவியளாலர்களினால் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுடைய கருதுக்களும் உள்வாங்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தொடர்சியாக குறித்த போதை பொருள் ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் இடம் பெற இருப்பது குறிப்பிடதக்கது.