179
புதிய திரைப்படமொன்றின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் நான்காவது முறையாக நடிகர் விஜயுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். ரஜினியின் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ள முருகதாஸ், அடுத்து விஜயை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
‘சர்கார்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக ரஜினியை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்புக்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்த திரைப்படத்தை முடித்தவுடன் அடுத்து விஜயை வைத்தே புதிய படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக முருகதாஸ் கூறியுள்ளார்.
‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவான ‘சர்கார்’ கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்த நிலையில், விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி 2’ படம் நிச்சயமாக வெளிவரும் என்று தெரிவித்தார். அதுவெ விஜய் – முருகதாஸ் நான்காவது திரைப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் பெயரிடப்படாத, தனது 63 ஆவயது திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love