Home பிரதான செய்திகள்அவுஸ்திரேலியா – இலங்கைக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

அவுஸ்திரேலியா – இலங்கைக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

by admin


அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெறுகின்றது.  இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளநிலையில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இரண்டு அணிகளுக்குமிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இதுவரையில், அவுஸ்திரேலியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, ஒரு போட்டியிலும் வெல்லாத நிலையில், அவுஸ்திரேலியாவில் தமது முதலாவது வெற்றியை இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமொன்றாக இது நோக்கப்படுகிறது.

சுரங்க லக்மாலின் தலைமையில் லஹிரு குமார, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர எனக் காணப்படும் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் இல்லாத துடுப்பாட்டவரிசைக்கு சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More