இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் அமெரிக்க படைத்தளம் – தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையா? JVP கேள்வி..

அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைக்கு இலங்கையில் தளம் அமைக்க அரசாங்கம் இடமளிப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாதா என ஜே.வி.பி பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக, பாராளுமன்றத்தில் நேற்று இந்த ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்து கொள்வது புதிய விடயமல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளும் இவ்வாறான விடயங்களை செய்துள்ளன.

எனினும் குறிப்பிட்ட கேள்வியை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.