Home இந்தியாசட்டவிரோதமான முறையில்  தங்கியிருந்த, இந்திய பிரஜைகள் கைது..

சட்டவிரோதமான முறையில்  தங்கியிருந்த, இந்திய பிரஜைகள் கைது..

by admin


சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 24 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுள்ளதுடன், அவர்களின் விசா காலம் நிறைவடைந்திருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 24 பேரும் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட உள்ளனர். இது சம்பந்தமாக விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More