Home சினிமாசிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தின் பெயர் மிஸ்டர் லோக்கல்:

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தின் பெயர் மிஸ்டர் லோக்கல்:

by admin



எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13ஆவது திரைப்படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு ஏற்கனவே ஒரு பெயர் வைக்கப்பட்ட நிலையிலேயே இப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும்  திரைப்படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. எனினும் ‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.

படத்திற்கு தலைப்பு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று இயக்குநர் ராஜேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பையே வைக்க படக்குழு முடிவு செய்ததாகவும், பின்னர் ‘மிஸ்டர் லோக்கல்’ தலைப்பு படத்திற்கு பொருத்தமாக இருக்கும் படக்குழு முடிவு செய்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் காணப்படுவதாகவும் படக்குழு கூறியுள்ளது.

நகைச்சுவைப் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடிக்கின்றார். படத்தின் முதல் புகைப்படம்,  சுவரொட்டி மற்றும் தலைப்பு பெப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாகவும் படக் குழு அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More