Home சினிமா டெல்லி மாணவி வன்புணர்வு குறித்து இணையதளத் திரைப்படம்:

டெல்லி மாணவி வன்புணர்வு குறித்து இணையதளத் திரைப்படம்:

by admin



டெல்லியில் பேருந்தில் தனது நண்பருடன் சென்ற மருத்துவ மாணவி வன்புணரப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டத்தை தழுவி இணையத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் தனது நண்பருடன் சென்ற மருத்துவ மாணவி குழு ஒன்றினால் வன்புணரப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாட்டையே பரபரப்பாக்கிய இந்த சம்பவத்தில் காவல்துறையினர், குற்றவாளிகளைக் கண்டறிந்து சிறையில் அடைத்தனர்.

அவர்களில் 17 வயது சிறுவன் ஒருவனும் இடம்பெற்றார். குறித்த சிறுவன்  வயதை காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டதனால் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டது. இந்த நிலையில், மருத்துவ மாணவியின் வழக்கை தழுவி 7 மணிநேர  டெல்லி கிரைம் என்ற பெயரில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷிபாலி ஷா, லைப் ஆப் பை படத்தில் நடித்த அடில் ஹுசைன், டென்சில் ஸ்மித், ராஷிகா டுகல், ராஜேஷ் தைலங், யாஷாஸ்வினி டயானா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

சன் டேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்ட ‘டில்லி கிரைம்’ தொடர் இந்திய கனடா இயக்குநர் ரிச்சி மேத்தாவால் இயக்கப்பட்டது. ஏழு பகுதிகளாக உருவாகியுள்ள இந்தத் தொடர் மார்ச் 22ஆம் திகதி முதல் நெட் பிளிக்ஸ் என்ற இணையதளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

படம் குறித்து இயக்குநர் ரிச்சி மேத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“டெல்லி கிரைம் படத்தை இயக்கியது தனிப்பட்ட முறையில் என்னை உருமாற்றிய பயணம். சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியது, போலீசார் விசாரித்த பாதையில் மறுதேடல் செய்தது. பல்வேறு வரம்புகள் இருந்தபோதும் வழக்கை முடிக்க உறுதியுடன் அவர்கள் செயலாற்றியது என முக்கியமான பயணமாக அமைந்தது. இதுகுறித்த உரையாடலை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கையுடன் உள்ளேன்” 
என்று கூறப்பட்டுள்ளது.
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More