Home இலங்கைஇலங்கை- சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் திருத்தப்படவுள்ளது…

இலங்கை- சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் திருத்தப்படவுள்ளது…

by admin

அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கவுள்ளது…


இலங்கை – சிங்கப்பூருக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியை அறிந்துக்கொள்வதற்காக, அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தில் சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிங்கப்பூர் விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங்கைச் சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More