Home உலகம்அமெரிக்காவில் வரலாறு காணாத கடுங்குளிர் – அவசரநிலை அறிவிப்பு

அமெரிக்காவில் வரலாறு காணாத கடுங்குளிர் – அவசரநிலை அறிவிப்பு

by admin
 

துருவ சுழல் என அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்நோக்கியுள்ள அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் காரணமாக அமெரிக்காவில் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிக்காவின் பகுதிகளை சிகாகோவில் விட குளிர் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் மக்களை வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ள நிலையில் வீசும் குளிர் காற்று மிகவும் கடுங்குளிராக இருக்கும் எனவும் தேசிய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கடுங்குளிரை 250 மில்லியன் அமெரிக்கர்கள் சந்திக்கவுள்ள நிலையில், 90 மில்லியன் பேர் -17 டிகிரி செல்சியஸ் டிகிரி வானிலையை எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து மேற்கு மாநிலங்களான விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ் மற்றும் தொலைதூர மாநிலங்களான அலபாமா மற்றும் மிஸிசிப்பியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிவ் இதுவொரு வரலாற்று பதிவாக இருக்கும் என இல்லினாய்ஸ் தேசிய வானிலை மையத்தின் வானியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More