Home பிரதான செய்திகள்இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது

இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது

by admin


இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கின்றது.

இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்த லையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 93 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றியீட்டியுள்ளது.இதன்மூலம் நியூசிலாந்து. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியுசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More