Home இலங்கைதமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்..

தமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்..

by admin

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, தமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டுமென, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில், நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பினர், வௌ;வேறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஏனைய தமிழ்த் தரப்பினருடனும் புலம்பெயர் அமைப்புகளுடனும் கலந்துரையாடிச் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர்;, யுத்தக் குற்றச்சாட்டுகள் போன்ற விடயங்கள், சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணையத்தினூடாகவே விசாரிக்கப்பட வேண்டுமென தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதற்காக 4 வருடகால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக மறுதலித்து வருவதாகவும் இதுவரை எந்தவிதமான விசாரணை ஆணையங்களும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அலுவலகத்தினை காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கூட, ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More